தீபாவளியை முன்னிட்டு நான்கு கோடிக்கு ஆடுகள் விற்பனை..!

       -MMH


தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் 3 மணி நேரத்தில் 4 கோடிக்கு ஆடுகள்,விற்கப்பட்டதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.கல்லக்குறிச்சிமாவட்டம்,உளுந்தூர்பேட்டையில் வாரம்தோறும் புதன்கிழமையன்று வாரச்சந்தை நடப்பது வழக்கம்.


சனிக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அன்றைய தினம் இறைச்சி அதிக அளவில் விற்பனையாகும். அதற்காக ஆடுகளை சந்தையில் விற்க கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், திருவெண்ணை, நல்லூர், திருக்கோவிலூர் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஆடுகளுடன் சந்தைக்கு வந்திருந்தனர்.


ஒரு ஆட்டின் விலை ரூபாய் 5 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. 3 மணி நேரத்தில் நான்கு கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனையானது. தீபாவளி காரணமாக அதிகபட்சமாக 12 ஆயிரம் ரூபாய் வரையில் ஆடுகள் விற்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஆயிரக்கணக்கான விவசாயிகளும், வியாபாரிகளும் குவிந்ததால் உளுந்தூர்பேட்டை ஆட்டு சந்தை களைகட்டியது.


-ஸ்டார் வெங்கட்.


Comments