வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! 8 மாவட்டங்களில் கனமழை...!

        -MMH


வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால், சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


சென்னை : வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால், தமிழகம், புதுவையில் பலத்த மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் அடுத்து வரும் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும். 15-ந் தேதி வரை மழையை எதிர்பார்க்கலாம்.


குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும். மேலும் அடுத்த 48மணி நேரத்திற்கு சென்னை உட்பட 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறையில் மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 2 நாட்களுக்கு விட்டு, விட்டு பலத்த மழை பெய்ய கூடும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அண்ணா பல்கலைக்கழகம், மண்டபத்தில் தலா 3 செ.மீ. மழையும், எண்ணூர், நுங்கப்பாக்கம், ஆலந்தூர், மயிலாடுதுறையில் தலா 2 செ.மீ.மழையும் பெய்துள்ளது.


நாளைய வரலாறு செய்திகளுக்காக, 
-V.ருக்மாங்கதன் சென்னை.


Comments