பீஷ்மர் மோகன்ஜி விருது!! - தன்னார்வலருக்கு வழங்கல்!!

      -MMH


திருப்பூர்:கிட்ஸ் கிளப் கல்வி குழும நிறுவனர் மோகன் கந்தசாமி நினைவுநாள் முன்னிட்டு, 'திருப்பூர் பீஷ்மர் மோகன்ஜி' விருது வழங்கும் விழா, கிட்ஸ் கிளப் மெட்ரிக் பள்ளியில் நேற்று நடந்தது.தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., குணசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் பங்கேற்று, சமூக நலன் சார்ந்த அமைப்புகளுக்கும், தன்னார்வலர்களுக்கும் விருது வழங்கினார். வனத்துக்குள் திருப்பூர் இயக்கத்தின் திட்ட இயக்குனர் மற்றும் பள்ளி செயலாளர் நிவேதிகா வாழ்த்துரை வழங்கினார். பள்ளி தாளாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார். மோகன்ஜி அறக்கட்டளை ரமேஷ், சிறப்பு விருந்தினருக்கு கேடயம் வழங்கினார்.சேவபாரதி, சிகரங்கள் அறக்கட்டளை, தமிழ் பண்பாட்டு மையம், இயற்கை ஏரி, நல்லது நண்பர்கள் அறக்கட்டளை, முயற்சி மக்கள் அமைப்பு, வெற்றி அறக்கட்டளை, வேர்கள் போன்ற பல்வேறு அமைப்பினருக்கு விருது வழங்கப்பட்டது.


நாளையவரலாறு செய்திக்காக,


-முஹம்மது ஹனீப்,திருப்பூர்.


Comments