பொள்ளாச்சியில் வார சந்தை அமைக்க மக்கள் கோரிக்கை..!!

      -MMH


பொள்ளாச்சி மற்றும் அதன் அனைத்து சுற்று வட்டார பகுதிகளிலும் கொரன ஊரடங்குக்கு முன்பு வரை வார வாரம் காய்கறி சந்தைகள் நடந்து வந்தனர்  பொள்ளாச்சி வாரச்சந்தைகளில் காய்,காய்கறிங்கள் 10 ரூபாய்க்கு கூறுகளாக விற்கப்பட்டது இதனால் மிகவும் குறைவான விலையில் அணைத்து தரப்பு மக்களும் வாரச்சந்தைகளுக்கு சென்று காய்கறிகளை வாங்கிவந்தனர்.


கொரன ஊரடங்கு தளர்வுக்கு பின்பு தமிழக அரசு வார சந்தைகள் அமைக்க அனுமதி வழங்கிய நிலையிலும் வார சந்தைகள் துவங்க படாமல் உள்ளனர் .இதனால் நடுத்தர மக்களும் கூலி தொழிலாளிகளும் காய்கறிகளை வாங்க மிகவும் சிரமப்படுவதால் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்கள் வாரச்சந்தை அமைக்க பொதுமக்கள் பொள்ளாச்சி வணிகர்களுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர் .பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வாரச்சந்தைகள் விரைவில் அமைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது .


நாளைய வரலாறு செய்திகளுக்காக,


-V.ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments