ஆன்லைன் செய்தீங்களா? அலார்ட்டா இருங்க....!

     -MMH


ஆம்! ஆன்லைன் செய்தித் தளங்கள் மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. செய்தி கொடுக்கும் போது உண்மைச் செய்தியா என்று உறுதிப்படுத்திக் கொண்டு கொடுப்பது அனாவசியச் சிக்கலைத் தவிர்க்கும்.


இந்தியாவில் தற்போது டிஜிட்டல் மீடியா பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், ஆன்லைன் செய்தி தளங்கள், ஓடிடி தளங்கள், மற்றும் டிஜிட்டல் கன்டென்ட் தளங்கள் ஆகியவை மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.


இது தொடர்பாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ உள்ளிட்ட ஆன்லைன் ஸ்டிரீமிங் தளங்கள் மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கியுள்ளார்.


இதன் மூலம் டிஜிட்டல் மீடியாவில் வெளியாகும் அனைத்து நிகழ்ச்சிகளையும், அரசு கண்காணிக்கவும், பரிசோதனை செய்யவும் முடியும்.


-சோலை, சேலம்.


Comments