குழந்தைகள் பசியாற்றும் பாலையும் விட்டு வைக்காத கொரோனா!

      -MMH


தமிழக அரசு நிறுவனமான, ஆவினில் நான்கு வகை பால் பாக்கெட்டுகள் விற்பனையில் உள்ளன. இதில் எப்.சி.எம். மில்க் ஒரு லிட்டர் ரூ.51க்கு விற்கப்பட்டது. இது 6 சதவீதம் கொழுப்பு, 9 சதவீதம் இதர சத்துக்கள் கொண்டது.
ஆனால் கடந்த ஒரு வாரமாக 1 லிட்டர் பாக்கெட்டுகள் நிறுத்தப்பட்டு அரை லிட்டர் பாக்கெட்டாக ரூ.26க்குவிற்கப்படுகின்றன. இதன் மூலம் மறைமுகாக
ஒரு லிட்டர் ரூ.1 உயர்த்தப்பட்டுள்ளது.


இதே எப்.சி.எம்., பாலில் இதர சத்து 1 சதவீதம் மட்டும் அதிகரித்து எப்.சி.எம்., டி மேட் என்ற பெயரில் ரூ.4 விலை அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.55 க்கு தற்போது விற்கபடுகிறது.


ஒரு சதவீதம் சத்து அதிகரித்தால் ரூ.2 வரை விலை உயர்த்தலாம். ஆனால் ரூ.4 உயர்த்தியுள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பால் விலை உயர்வு குறித்து தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும், பால் விலை உயர்த்தப்படும் போது விற்பனை விலை அதிகரிக்கும் என உற்பத்தியாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மதுரையில் மட்டும் அதிகாரிகள் தன்னிச்சையாக
உயர்த்தியுள்ளதால் கொள்முதல் விலையையும் உயர்த்த வேண்டும் என உற்பத்தியாளர்க வலியுறுத்தினர்.


இதனிடையே பால் விலை திடீர் உயர்வு காரணமாக மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்துள்ளனர். ஏற்கனவே கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் பால் விலை உயர்வு மேலும் குடும்பச் செலவில் கை வைக்கும் என்கின்றனர்.


-சோலை, சேலம்.


Comments