தென்னை மரங்களை காக்க புதிய வழி!!

     -MMH


     பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிகளவு தென்னை விவசாயம்  செய்து வருகின்றனர். இப்பகுதியில் இருந்து தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் தேங்காய், இளநீர் நாள்தோறும் அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களாக  தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதலால் தென்னை மரங்கள் பாதிப்புக்கு உள்ளாகி வந்தது. இதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர்.இந்நிலையில் புதிய முயற்சியாக தென்னை மரங்களில் 
பாலித்தீன் பைகளை கட்டி விளக்கெண்ணை தடவி வருகின்றனர். இதனால் வெள்ளை ஈக்கள் பாலித்தீன் பையில் பட்டு அழிந்து விடுவதாக தெரிவிக்கின்றனர் விவசாயிகள். இதனை அனைத்து விவசாயிகளும் பின்பற்றலாமே என்ற சிந்தனையோடு 


நாளைய வரலாறு செய்திக்காக,


-M.சுரேஷ் குமார்,கோவை தெற்கு. 


Comments