கோவையில் நகை கடையில் திருடிய கேரள தம்பதி கைது!!

 

-MMH

      கோவை, காந்திபுரம், கிராஸ்கட் ரோட்டிலுள்ள பவிழம் ஜூவல்லரிக்கு, கேரள மாநிலம், ஆலப்புழாவை சேர்ந்த சுதீஷ்,38, ஷானி,31, ஆகியோர் சென்றனர். தங்க செயின் மாடல்களை எடுத்து காண்பிக்குமாறு கேட்டனர்.ஊழியர்கள் ஒவ்வொரு நகையாக எடுத்து காட்டினர். அனைத்து நகைகளையும் பார்த்த தம்பதி, 'நகை மாடல்கள் பிடிக்கவில்லை' என்று கூறி நகை வாங்காமல் திரும்பி சென்றனர்.அவர்கள் சென்ற பிறகு  நகைகளை சரி பார்த்த போது, நான்கு சவரன் நகை மாயமாகியிருந்தது. நகை வாங்காமல் சென்ற தம்பதியர் இருவரையும் மடக்கி பிடித்தனர். சோதனை செய்த போது, நகையை திருடி சென்றது தெரிய வந்தது.செயின் திருடப்பட்டதை அறிந்த கடை மேலாளர் போலீசில் புகார் அளித்தை அடுத்து கேரள தம்பதி கைது செய்யப்பட்டு, திருடப்பட்ட செயின் பறிமுதல் செய்யப்பட்டது.  இருவரையும் காட்டூர் போலீசார் வழக்கு பதிந்து, திருட்டு தம்பதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

-அருண்குமார் கோவை மேற்கு.

Comments