வீடு செழிப்பாக அமைய இவையெல்லாம் கடைபிடியுங்கள்!!

     -MMH 


 *சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்திருக்க வேண்டும். சூரிய உதயத்துக்குப் பின்னும் உறங்கிக்கொண்டிருக்கக் கூடாது.


*காலை எழுந்திருக்கும்போது, பசு, அக்னி, வேதம் கற்றவர் போன்றோரைப் பார்த்தல் லட்சுமி கடாட்சத்தை உண்டாக்கும். பசு மாட்டின் பால் கறக்கும் ஒலி, தயிர் கடையும் ஒலி, வேத கோஷம் உள்ளிட்ட நல்ல ஒலிகளைக் கேட்டபடி எழுந்திருத்தல் லட்சுமி கடாட்சத்தை உண்டாக்கும்.


*படுக்கையை விட்டு எழுந்தவுடன் வாய் கொப்புளித்து விட்டு, ஆசமனம் செய்ய வேண்டும். படுக்கையை விட்டு எழுந்தவுடனேயே எந்த உணவுப் பொருளையும் உட்கொள்ளக் கூடாது.


*காலைக் கடன்களைக் கழித்து விட்டு உடனே நதியிலோ, குளத்திலோ இறங்கிவிடக் கூடாது. பாத்திரத்தில் உள்ள தண்ணீரால் முதலில் தன்னைத் தூய்மைப்படுத்திக்கொண்டு அதன்பின்தான் நதியிலோ, குளத்திலோ இறங்கலாம்.


*காலைக் கடன்களை முடித்தபின், கைகால்களைக் கழுவி அதன்பின் வாய் கொப்புளிக்க வேண்டும். கைகால்களைக் கழுவாமல்
வீட்டினுள் நுழைந்தால், லட்சுமி அங்கே வசிக்க மாட்டாள்.


* வாய் கொப்புளிக்கும்போது, தண்ணீரை இடப்புறம் உமிழ வேண்டும். வலப்புறம் உமிழக் கூடாது.


* பல் துலக்கும்போது ஆள்காட்டி விரலைப் பயன்படுத்தக்கூடாது. நடுவிரல், மோதிரவிரல் போன்ற விரல்களை பயன்படுத்தலாம்.


*சூரிய உதயத்துக்கு முன் நீராடுவது விசேஷமாகும். வெந்நீரை விளாவும்போது, குளிர்ந்த நீரின் மேல்தான் வெந்நீரை ஊற்ற வேண்டுமே ஒழிய வெந்நீரில் குளிர்ந்த நீரை ஊற்றி விளாவக்கூடாது.


*வெள்ளைநிற வேஷ்டியையே உடுத்த வேண்டும். கரை இல்லாத வேஷ்டியையோ, நீலம் அல்லது கருப்புக் கரைபோட்ட வேஷ்டியையோ உடுத்தக்கூடாது. சந்நியாசிகள் மட்டுமே காவி நிற வேஷ்டியை உடுத்தலாம்.


*வெறும் நெற்றியுடன் இருக்கவே கூடாது. எப்போதும் நெற்றியில் அவரவர் குடும்ப மரபின்படித் திலகம் இட்டுக்கொள்ள வேண்டும்.


*உணவு உட்கொள்ளும் முன் அவசியம் கை கால்களை அலம்பிக் கொள்ளவேண்டும். உண்டபின்னும் கை கால்களை அலம்ப வேண்டும். அவசியம் வாய் கொப்புளிக்க வேண்டும். கை கால்களை அலம்பாமல் உணவு உட்கொள்பவர் வீட்டில் மகாலட்சுமியின் தமக்கை குடிவந்துவிடுவாள்.


*நகம், முடி போன்றவற்றை வீட்டில் போடக் கூடாது. அவை வீட்டில் இருந்தால் உடனே அப்புறப்படுத்த வேண்டும். மாலை சூரியன் அஸ்தமித்த பின், நகம் வெட்டுவதோ, தலை சீவுவதோ கூடாது.


*காலையும் மாலையும் வீட்டை நன்கு பெருக்கி, சுத்தப்படுத்தி, பூஜை அறையில் விளக்கேற்ற வே…


*தரையில் அமர்ந்து உணவு உண்பதே சாலச் சிறந்தது.


*உணவு உண்ணும் முன் கைகூப்பி இறைவனை வணங்கிவிட்டுத்தான் உண்ண வேண்டும்.


*அன்னத்தை நிந்திக்கவே கூடாது.


*அமங்கலமான வார்த்தைகளை வீட்டில் பேசக்கூடாது. வீட்டில் அரிசி இல்லை என்று சொல்வதற்குப் பதிலாக வீட்டில் அரிசி வரவேண்டி உள்ளது என்றே சொல்ல வேண்டும்.


*கையை வாயில் வைத்து எச்சில் செய்யக் கூடாது. எச்சில் பட்டால், உடனே கைகளை அலம்பிக் கொள்ளவேண்டும்.


*நகத்தைக் கடிக்கக்கூடாது.


*பற்களைக் கடிக்கக்கூடாது.


*துணிகளைத் துவைத்த பின் நன்கு பிழிந்து விட்டுத்தான் உலர்த்த வேண்டும். காயப் போட்டிருக்கும் துணியிலிருந்து தண்ணீர் சொட்டக்கூடாது.


*சாதம் வடித்து மூன்றே முக்கால் மணிநேரத்துக்குள் அதை உட்கொண்டுவிட வேண்டும். அதைத் தாண்டி நேரமானால், வடிக்கப்பட்ட சாதத்தைத் தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். அல்லது, கலவை சாதமாகப் பிசைந்து வைக்க வ…


 *உணவு உண்டபின், சிறிதளவாவது மிச்சம் வைத்து, அதைப் பிற உயிரினங்களுக்குத் தரவேண்டும்.


*பகலில் அதிக நேரம் உறங்கக்கூடாது.


*இரவில் கால்களை அலம்பிக் கொண்டு, ஈரத்தைத் துடைத்துக்கொண்ட பின்தான் படுக்க வேண்டும்.


*பிறப்பு, இறப்பு உள்ளிட்ட தீட்டுகள் வந்தால் கூட, சந்தியாவந்தனம் செய்பவர்கள் சந்தியாவந்தனத்தை விட்டுவிடக் கூடாது. பத்து முறை காயத்திரி மந்திரம் ஜபித்து சந்தியாவந்தனம் செய்தே தீர வேண்டும்.


*நெருப்பை வாயால் ஊதி அணைக்கக்கூடாது. இக்காலத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில் மெழுகுவர்த்திகளை ஊதி அணைக்கும் வழக்கத்தைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.


*பெண்கள் பூசணிக்காயை உடைக்கக்கூடாது.


*ஆண்கள் தீபத்தை அணைக்கக்கூடாது.


*செவ்வாய், சனி, அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு போன்ற நாட்களில் முடி வெட்டிக் கொள்ளுதல், க்ஷவரம் செய்து கொள்ளுதல் கூடாது.


*சூதாடக் கூடாது.


 *வீட்டுக்கு வெளியில் நின்று கொண்டோ, கட்டிலில் அமர்ந்துகொண்டே உணவு உண்ணக் கூடாது.


*இரண்டு ஆடுகளுக்கு நடுவே செல்லக் கூடாது. ஆட்டின் புழுதி நம் மீது பட்டால் நீராட வேண்டும். பசுமாட்டின் புழுதி நம் மீது பட்டால், அதுவே நீராடியதற்குச் சமம்.


*மின்னல், எரிநட்சத்திரம், கிரகணம், காலை ஒளி, மாலை ஒளி உள்ளிட்டவற்றைப் பார்க்கக் கூடாது.


*எழுந்து செல்லும் நபரை அழைக்கக் கூடாது. எங்கே போகிறீர்கள் என்று கேட்கக் கூடாது.


*இல்லறத்தில் உள்ள ஆண், கச்சம் வைத்துத் தான் வேஷ்டி அணிய வேண்டும்.


லட்சுமி நம் இல்லத்தில் வசிப்பதால் ஏற்படும் நன்மைகள் ரதி மதி ஸரஸ்வதீ த்ருதி ஸம்ருத்தி ஸித்தி ச்ரியஸுதாஸகி யதோமுகம் சிசலிஷேத் தவ ப்ரூலதாலட்சுமி எந்த வீட்டில் குடியிருக்கிறாளோ, அந்த வீட்டில் இன்பம், அறிவு, பேச்சாற்றல், வலிமை, செழிப்பு, வெற்றி, செல்வம் ஆகிய அனைத்தும் நிறைந்திருக்கும்.


-ஸ்டார் வெங்கட்.


Comments