கஞ்சா விற்கும் சமூக விரோத கும்பல்..!-முன்கூட்டியே புகார் அளித்தும் குறட்டை விட்ட காவல்துறை..!

-MMH   (தமிழன் டிவி செய்தியாளர் மோசஸ்)


 செய்தி வெளியிட்டு அம்பலப்படுத்திய நிருபர் படுகொலை...!


ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிக்கை குரல்வளை சமூக விரோதிகளாலும், அரசியல்வாதிகளாலும், ரவுடி கும்பல்களாலும் தொடர்ந்து தமிழகத்தில் நெறிக்கப்படுகிறது. இதனை கண்டு கொள்ளாமல் ஆட்சியாளர்களும், காவல்துறையும் குற்றவாளிகளுடன் கைகோர்த்து வெண்சாமரம் வீசிக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கு இந்த படுகொலை சம்பவமே சாட்சி..!!


சென்னை அருகே குன்றத்தூர்  பகுதியில் கஞ்சா விற்கும் சமூக விரோத கும்பல் குறித்து துணிச்சலாக செய்தியை வெளியிட்டுள்ளார், அப்பகுதி தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ். 


இந்நிலையில், இரவு 10:30 மணி அளவிவ் தெரிந்த நபர் யாரோ ஒருவர் போன் நம்பர் கேட்டதால்  அவர் வீட்டு அருகே வெளியே வந்து அவருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.


 அப்போது திடீரென மோசஸ் அலறல் கேட்டு அவரது' தந்தை வாசலுக்கு ஓடிய போது இரண்டு பேர் பயங்கர ஆயுதத்தோடு தாக்குவதை பார்த்துள்ளார்.

 அவரின் தந்தை வெளியே வருவதை கண்டு அரிவாளுடன் இருவரும் அங்கு இருந்து ஒடி விட்டனர்.


தலையில் கையில் பலத்த வெட்டுடன் குரோம்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மோசஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


இவர் கடந்த வாரம் அவர் ஏரியாவில் நடக்கும் கஞ்சா வியாபரத்தையும் சமூக அவலத்தையும் பற்றி செய்தி வெளியிட்டார்.


 அதன் பிறகு அவருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் வந்துள்ளது. இது தொடர்பாக அவரது தந்தை மூலம் அருகில் உள்ள சம்பந்தப்பட்ட காவல் நிலையில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
 ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


 அப்படி எடுத்திருந்தால் என் மகனை இழந்து இருக்க மாட்டேன் என்று செய்தியாளரின் தந்தை கதறி அழுதார்.


காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்காதது தான் ஒரு உயிர் பலியாகி விட்டது என்று குடும்பத்தார் புகார்  தெரிவித்துள்ளனர்.


 இதுபோன்ற கொடூர  சம்பவம் இது வரை தமிழகத்தில் பத்திரிக்கையாக்கள் சந்திக்காத சம்பவம்.


 தமிழக காவல் துறை இயக்குநர் தலையிட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப விடாமல் உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக முதல்வர், உடனே செய்தியாளர் மோசஸ் குடும்பத்துக்கு 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.


 மற்ற மாநிலத்தில் உள்ளது போல,  தமிழகத்திலும் பத்திரிக்கையாளர்களை பாதுகாக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும்.


உயிரிழந்தவர் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.


 இதுதான் தற்போது தமிழக பத்திரிகையாளர்கள் கோரிக்கையாக உள்ளது.


நீதி கிடைக்குமா?


பொறுத்திருந்து பார்ப்போம்.


-செய்தியாளர், ஆர்.கே. பூபதி.


Comments