பொள்ளாச்சி மக்களுக்கு சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்..!!

     -MMH


பொள்ளாச்சி மக்களுக்கு சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்..!!


     நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடவிருக்கும் நிலையில் தமிழக அரசு பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாட்டை விடுத்துள்ளது. அதன்படி தீபாவளி பண்டிகையின் போது காலை 6 மணி முதல் 7 மணிவரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் மற்ற நாட்களிலோ, நேரங்களிலோ பட்டாசு வெடிக்க தமிழக அரசு தடை விதித்து உள்ளது. இருப்பினும் மக்கள் அதனை சற்றும் பொருட்படுத்தாமல் நினைத்த நேரத்தில் பட்டாசுகளை வெடித்து வருகின்றனர். இதனால் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் சற்று சிரமத்துக்கு உள்ளாகின்றனர். 


தமிழக அரசின் இத்தகைய நேர கட்டுப்பாடு நம் மகிழ்ச்சியை குறைக்க போடப்பட்டது இல்லை மாறாக  நம்மையும் நம் சுற்று சூழலலையும் பாதுகாக்கவே போடபட்டது என்பதை உணர்ந்து மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறி உள்ளார்.


நாளைய வரலாறு செய்திக்குக்காக,


-V.ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments