தொடர் மணல் கொள்ளை ஒருவர் கைது..!

          -MMH


புழுதிபட்டி பகுதியில் தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது.40 மூட்டை மணலுடன் மணல் கடத்தப் பயன்படுத்திய மினி டிப்பர் லாரி பறிமுதல்.சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், புழுதிபட்டி பகுதியில் தொடர்ந்து மணல் கடத்தப்படுவதாக புழுதிபட்டி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில், 
செட்டிகுறிச்சியைச் சேர்ந்த சேவுகன் (40) என்பவருக்குச் சொந்தமான தோப்பில் சோதனை செய்ததில்,


அங்கு சட்டவிரோதமாக 40 மூட்டை மணல் ஒரு மினி டிப்பர் லாரியில் ஏற்றிவைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். மணலையும்,மினி டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்தனர்.
புழுதிபட்டி கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் பெறப்பட்டு, வழக்கு பதிவு செய்து புழுதிபட்டி காவல் துணை ஆய்வாளர் டி.ஆர்.ராமசந்திரன் தலைமையிலான குழுவினர் நூதன முறையில் தொடர் மணல் திருட்டில் ஈடுபட்ட சேவுகனை கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


-பாரூக்,சிவகங்கை.


Comments