கோவை மாணவியின் சாதனை!! ஓவியத்தில் விருதுகள்...!

         -MMH 


அதிசயம் ஆனால் உண்மை..!!! - கோவை மாவட்ட தொண்டாமுத்தூர் பகுதி உலியம்பாளையத்தை சேர்ந்தவர் மோனிஷா. தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ பயின்று வருகிறார். ஓவியத்தில் மிகவும் ஆர்வமிக்க இவர் கடந்த பிப்ரவரி மாதம் புது முயற்சியாக முட்டையில் தேச தலைவர்கள் 50 பேரின் ஓவியத்தை குறைந்த நேரத்தில் வரைந்து சாதனை படைத்தார்.


அவரின் சாதனைக்கு "இந்தியன் புக் ஆப் ரெகார்", "கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்" என்ற இரு விருதுகள் கிடைத்தன. இந்நிலையில் அவர் வரைந்த ஓவியத்திற்கு "Global excellence" என்ற சர்வதேச விருது கிடைத்துள்ளது. Incredible Talents என்ற நிறுவனம் நடத்திய சர்வதேச ஓவிய போட்டியில் 2000 பேர் கலந்து கொண்டதில் முதல் 25
தேர்ச்சியாளர்களில் இவர் வென்றுள்ளார்.முட்டையில் ஓவியம் வரைந்து சாதனை புரிந்ததற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.


அதே போல் இந்த ஊரடங்கு காலத்தில் மினியச்சர் பொருட்கள், ஓவியம் போன்ற பலவற்றை செய்துள்ளதால் இவருக்கு சென்னையில் "Doctorate Award for young Archiver" என்ற விருதும் கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி கின்னஸ் போட்டியில் ஓவியம் வரைந்து இறுதி முடிவிற்காக காத்து கொண்டிருக்கிறார். இவரின் சாதனைகளுக்கு அப்பகுதியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.


-கிரி கோவை மாவட்டம்.


Comments