பள்ளிகள் திறப்பு சம்பந்தமாக நாளை ஆலோசனை கூட்டம்!! - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!

     -MMH


கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-


பள்ளிகள் திறப்பு தொடர்பாக கருத்துகேட்பு கூட்டம் நாளை பாதுகாப்புடன் நடக்கும்.  நாளை நடக்கும் கூட்டத்திற்கு  வருபவர்கள் சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாக  கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது, சுகாதாரத்துறையின்  வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும்.கூட்டம்  பாதுகாப்புடன் நடைபெறும்.


பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் என்று மாணவர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். மாணவர்களின் எதிர்காலத்தை  கருத்தில் கொண்டு அவர்கள் இருப்பிடத்தின் அருகில் உள்ள பள்ளிகளில் சென்று கருத்து தெரிவிக்கலாம். பொதுத்தேர்வு எழுத்தவுள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.


2,505 பள்ளிகளுக்கு இந்த ஆண்டிற்கான அனுமதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


நாளைய வரலாறு செய்திக்காக,


இராஜசேகரன்,தஞ்சாவூர்.


Comments