தமிழரின் வியத்தகு அறிவியல் அறிவு!

     -MMH


"சில நாட்களுக்கு முன்பு எங்கள் வளர்ப்பு  நாட்டுமாடு கன்று ஈன்றது. ஆனால், வறட்சி  மற்றும் தீவனப்  பற்றாக்குறையால் கன்று எடை குறைவாகப் பிறந்து எழுந்து நிற்க இயலாமல் வருந்தியது. 
நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தபோது, பக்கத்துத் தோட்டத்துப்  பாட்டி ஒரு பழங்கால  இன்குபேட்டர் முறையைக்  கூறினார்.


அதன்படி பெரிய கூடையில் பருத்திக்  கொட்டையைப் பரப்பி,  கன்றை அதில் படுக்க வைத்தோம். என்ன வியப்பு! ஒரே நாளில் ஓரளவுக்கு நின்று தாயிடம் பால் குடிக்குமளவுக்கு அக்கன்று  தயாராகி விட்டது."


நமது வாசகர் ஒருவரின் மேற்கண்ட செய்தியைப் படித்ததும் 
பழந்தமிழர்தம் அருமையான இதுபோன்ற எத்துணை எத்துணை பாரம்பரிய வைத்திய முறைகள் நமக்குத்  தெரியாமலே  போகின்றது என்ற ஆதங்கமே மேலோங்கியது. 


நிற்க, இவ்வாறு பிறக்கும் கன்றுகளுக்கு இயற்கை வைத்திய முறைகள் வேறு ஏதாவது  இருப்பின் நமது நாளைய வரலாறு வாசகர்கள் பகிர்ந்து கொள்ளலாமே!


-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை.


Comments