சிங்கம்புணரியில் கிரிக்கெட்,ஆணழகன் போட்டி நடைபெற்றது..!

       -MMH


சிங்கம்புணரியில் கிரிக்கெட் மற்றும் ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை அ.தி.மு.க பிரமுகர்கள் வழங்கினர்.சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் மாருதி ஸ்டார் ஜிம் எனும் நிறுவனம் நடத்திய மாபெரும் கிரிக்கெட் மற்றும் ஆணழகன் போட்டி நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 24 அணிகள் பங்குபெற்றன.இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற சிங்கம்புணரியை சேர்ந்த சிங்கை புயல் அணி முதலிடத்தைப் பிடித்தது. சிங்கம்புணரி சிங்கை அசல்தல அணியினர் இரண்டாமிடத்தைப் பெற்றனர். மூன்றாம், நான்காம் இடங்களில் முறையே   கிழவயல் KCC அணியினர், தெக்கூர் எஸ்.எஸ்.காலேஜ் அணியினர் வென்றனர்.


நான்கு அணியினருக்கும் பரிசுத்தொகையுடன் கோப்பைகளை அ.தி.மு.க பிரமுகர்கள் வழங்கினார்கள்.
ஆணழகன் போட்டியில் மானாமதுரையை சேர்ந்த 2 பேரும் தேவகோட்டையை சேர்ந்த 2 பேரும், காரைக்குடியை சேர்ந்த ஒருவரும், திருப்பத்தூரை சேர்ந்த ஒருவரும், சிங்கம்புணரியை சேர்ந்த ஒருவரும் மொத்தம் 8 பேர் கலந்து கொண்டனர். இதில் முதல் பரிசு பெற்றவர் சிவகங்கையை சேர்ந்த மரியன் (மாஸ்கோ ஜிம், சிவகங்கை). இரண்டாவது பரிசு பெற்றவர் OMC திக்னஸ் மானாமதுரை சசிகுமார். மூன்றாவது பரிசு பெற்றவர் செந்தில்குமார் (சுகன்யா இன்டர்நேஷனல் ஜிம், காரைக்குடி). சிவகங்கைமாவட்ட ஆணழகன் சங்க பொருளாளர் முத்துராஜா, சிவகங்கை மாவட்ட ஆணழகன் சங்க துணைச்செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.பரிசுகளை வழங்கியவர்கள் சிவகங்கை மாவட்ட 1 வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பொன்.மணி.பாஸ்கர் மற்றும் திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் பொன்.ரகு மற்றும் சிங்கம்புணரி அ.தி.மு.க வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வாசு, சிங்கம்புணரி ஒன்றிய துணை தலைவர் சரண்யா ஸ்டாலின், எஸ்.புதூர் அ.தி.மு.க.கிழக்கு கழக ஒன்றிய செயலாளர் கே.என்.கருப்பையா, ஜெயம்கொண்டநிலை கவுன்சிலர் சசி மற்றும் சிவகங்கை மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் திருவாசகம், திருப்பத்தூர் நகர துணை செயலாளர் C.M முருகேசன் மற்றும் சிங்கம்புணரி, திருப்பத்தூர் மற்றும் எஸ்.புதூர் அ.தி.மு.க கழக நிர்வாகிகள் பிரமுகர்கள் மற்றும் உறுப்பினர்கள், அ.தி.மு.க.கழக தொண்டர்கள் கலந்துகொண்டு பரிசுகளை வெற்றிபெற்றவர்களுக்கு வழங்கினார்கள்.


-பாரூக்,சிவகங்கை.


Comments