தூய்மைப் பணியாளா்களுக்கு புதிய சீருடைகள்!!
-MMH
தூய்மைப் பணியாளா்களுக்கு புதிய சீருடைகள்!!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, காங்கயம் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு புதிய சீருடைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 2 பெண்கள் உள்படமொத்தம் 35 தூய்மைப் பணியாளா்களுக்கு புதிய சீருடைகளை நகராட்சி ஆணையா் பா.தேவிகா வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் எம்.செல்வராஜ் உள்பட நகராட்சி அலுவலக ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முஹம்மது ஹனீப், திருப்பூர்.
Comments