குற்றங்களை தவிர்க்க கண்காணிப்பு!!

     -MMH


உடுமலை:தீபாவளி கொண்டாட்டத்துக்காக, புத்தாடை, பட்டாசு, இனிப்பு வாங்க, உடுமலை நகரில், மக்கள் குவிந்து வருகின்றனர்.குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து கண்காணித்துவருகின்றனர்.


அதே போல் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.நகரில், கடைகள் அமைந்துள்ள முக்கிய வீதிகளில், மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நெரிசலை தவிர்க்க, முக்கிய வீதிகளில், கார் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்வதை தடுக்க, உடுமலை போலீசார், டிவைடர் வைத்து தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர்.


தேசிய நெடுஞ்சாலை மற்றும் தளி ரோடு வழியாக கடைக்கு வருபவர்கள், நான்கு சக்கர வாகனங்களை, குட்டைத்திடலில், நிறுத்த போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.கடைகள் அமைந்துள்ள தெருக்களில், கூட்டம் அலைமோதுவதால், கண்காணிப்புக்கு கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல், பஸ் ஸ்டாண்ட் பகுதியிலும், கண்காணிப்பு கூடுதலாக்கப்பட்டுள்ளது.


நாளையவரலாறு செய்திக்காக,


-முஹம்மது ஹனீப்,திருப்பூர்.


Comments