பொள்ளாச்சி அருகே மாட்டு வண்டியில் திருமணம்..!

  -MMH


பொள்ளாச்சி அடுத்த செஞ்சேரியை சேர்ந்தவர் மகேந்திரன் என்பவருக்கும் புனிதா என்பவருக்கும்  தேவனாம்பாளையம் ஈஸ்வரன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. முதுகலைப்பட்டம் முடித்த மணமகன் மணமகள் இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.கோவிலிலிருந்து மணமகள் வீட்டுக்கு மணமக்கள் புறப்பட்ட போது கார்கள் இருந்த போதிலும் பழமையை போற்றும் விதமாக இருவரும் மாட்டு வண்டியில் பயணித்தது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றது.
வழித்தடத்தில் இவர்களை காண்போர் வாழ்த்திச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


நாளைய வரலாறு செய்திக்காக


-M.சுரேஷ்குமார் கோவை தெற்கு.


Comments