தளபதி பெயரில் கட்சி!! -ஆனால் தனக்கு எந்த தொடர்பும் இல்லை..!!

     -MMH 


    விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர், அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி உள்ளார். இந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ரசிகர்கள் இந்த கட்சியில் இணைய வேண்டுமென விஜய் உத்தரவிட்டார். இதனால், தந்தை மகனுக்கும் பனிப்போர் நிலவி வருகிறது. 


இது குறித்து விஜய்யின் தாயார் ஷோபா கூறியதாவது, "நான் எஸ்ஏசி தொடங்கியுள்ள கட்சியில் இல்லை. அவர் என்னிடம் எதையும் சொல்லாமல் என்னிடம் கையெழுத்து வாங்கி, என்னை பொருளாளராக நியமித்து உள்ளார். அதனால் கட்சியில் இருந்து விலகி விட்டேன்." 


இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எஸ்ஏ சந்திரசேகர், அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சி பதிவு செய்தது நான் தான் விண்ணப்பித்துள்ளேன். அது என்னுடைய முயற்சி தான். விஜய்யின் அரசியல் கட்சி அல்ல. விஜய்க்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.


மேலும், நடிகர் விஜய், தன் பெயரையோ புகைப்படத்தையோ தனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புப்படுத்தி விவகாரத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். விஜய் பெயரில் கட்சி ஆரம்பிக்கவில்லை. அவர் பெயரில் 1993 ஆம் ஆண்டு ஆரம்பித்த ஒரு அமைப்பு. இது ரசிகர் மன்றமாக ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு, பிறகு நற்பணி மன்றமாக மாறியது. அதிலுள்ள தொண்டர்களுக்கும் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்பதற்காக பதிவு செய்தேன். 


விஜய் கூறியதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம். நான் என்ன நோக்கத்தில் கட்சியை பதிவு செய்தேன் என்பது தனித்தனியாக பேட்டி எடுக்க அப்போது உங்களுக்கு கூறுகிறேன். நல்லது நினைத்து ஆரம்பித்தேன். நல்லது நடக்கும் என தெரிவித்துள்ளார்.


-ஸ்டார் வெங்கட்.


Comments