தீபாவளியை முன்னிட்டு கும்பகோணம் தாலூக்காவில் சில மாறுதல்!!

    -MMH


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுக்காவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கும்பகோணம் நகர பேருந்து வழித்தடங்களில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.


தஞ்சை மாவட்ட கண்காணிப்பாளர் தேஷ்முக் மற்றும் சேகர் அவர்களின் ஆணையின்படி காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் அவர்களின் மேற்பார்வையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காவல்துறை விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


இந்த நிலையில் கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் வாகனங்கள்,பேருந்துகள் அனைத்தும் மகாமகம் குளக்கரை வழியாக ஏ ஆர் ஆர் ஆர்ச் வழியாக சென்று தஞ்சாவூர் சென்றடையும்.


தஞ்சாவூரில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் அம்மாபேட்டை புறவழிச்சாலை வழியாக செட்டிமண்டபம் புறவழிச்சாலையில் நான் ரோடு வந்தடையும் என்று பேருந்து தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


-வினோத் குமார்,கும்பகோணம்.


Comments