விவசாயிகளுக்கு வாட்ஸ் அப் குழு!! - பொள்ளாச்சி இளம் விவசாயிகள் அசத்தல்!!

     -MMH


     கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் விவசாயிகளின் புதிய முயற்சியாக விவசாயிகளுக்கு என்று தனியாக வாட்ஸ் அப் குழு ஆரம்பித்து தங்களால் விளைவிக்கும் பொருட்களுக்கு தாங்களே விலை நிர்ணயங்கள் என்ற அடிப்படையில் பொள்ளாச்சி இளைஞர் விவசாயிகள் செயல்படுகின்றனர்.



விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் தான் விலையை நிர்ணயம் செய்கிறார்கள். இதனால் விவசாயிகளுக்கு போதிய வருமானம் இன்றி தவித்து வருகின்றனர் குறிப்பாக பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தேங்காய் இளநீர் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்பி வருகின்றனர்.



தேங்காய் இளநீர் விலை ஒவ்வொரு விவசாயிகளுக்கும் மாறுபடுகிறது. இதை கருத்தில் கொண்டு இன்றைய தேங்காய் விலை இளநீர் விலை விவசாயிகளே நிர்ணயித்து சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். இதனால் உரிய விலை கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். மேலும் உற்பத்தி செய்யும் விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற சிந்தனையில் பொள்ளாச்சி விவசாய இளைஞர்கள் புதிய முயற்சியாக விளைவிக்கும் பொருட்களுக்கு தகுந்த விலை நிர்ணயித்து மற்ற விவசாயிகள் தெரிந்து கொள்ள சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இது விவசாயிகளிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.


நாளைய வரலாறு செய்திக்காக,


-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு. 


Comments