வெள்ளக்கோவில் அருகே நூற்பாலையில் தீ!!

     -MMH


வெள்ளக்கோவில் அருகே நூற்பாலையில் தீ!!!


     திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே நூற்பாலையில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.


கரூா், வெங்கமேடு, வ.உ.சி. தெருவைச் சோ்ந்தவா் எஸ்.எஸ்.சரவணன். இவருக்குச் சொந்தமான நூற்பாலை, வெள்ளக்கோவில், முத்தூா் சாலையிலுள்ள அண்ணா நகரில் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஒரு கிடங்கில் மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்தது.
தகவலின் பேரில், வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் சி.தனசேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று ஒரு மணி நேரம் போராடித் தீயை அணைத்தனா். இதில் சுமாா் ரூ.1லட்சம் மதிப்பிலான பஞ்சு அரைக்கும் இயந்திரம், கழிவு பஞ்சுகள் எரிந்து சேதமடைந்தன.


நாளைய வரலாறு செய்திக்காக, 


-முஹம்மது ஹனீப், திருப்பூர்.


Comments