பொள்ளாச்சி உடுமலை சாலை நடுவே விபத்தை ஏற்படுத்தும் கம்பிகள்!!

     -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு உடுமலை சாலை பகுதியில் அமைந்துள்ள ஊஞ்சவேலம்பட்டி சந்திராபுரம் பிரிவு சந்திப்பில் தானியங்கி சோலார் சிக்னல் உள்ளது.ஒரு சில நாட்களுக்கு முன் கன ரக வாகனம் உரச பட்டு சோலார் சிக்னல் சேதம் அடைந்த நிலையில் தற்போது சாலையில் அருகில் வளைந்து கிடக்கிறது.

வாகன ஓட்டிகள் பாத சாரிகள் செல்லும் போது விபத்தினை ஏற்படுத்தும் வகையில் காணப்படும் இந்த கம்பியை விரைவில் அப்புற படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் பொது மக்கள் கூறுகின்றனர்.

பொள்ளாச்சி இருந்து உடுமலை பழனி கொடைக்கானல் சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் இப்படி இருப்பது இன்னும் அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.

Comments