மூட்டுவலி பாடாய் படுத்துகின்றதா..!

-MMH 

காலையில் எழுந்தவுடன் எழுந்து நடக்க முடியாத அளவிற்கு மூட்டுவலி நம்மை பாடாய் படுத்துகின்றது. இன்றைய காலகட்டத்தில் அனைவரும் சந்திக்கும் பிரச்சினை அது மூட்டு வலிதான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூட்டு வலி வந்து விடுகின்றது. 

அதற்கு காரணம் நம் உணவு முறைகளும் மற்றும் பழக்க வழக்கங்களும் மட்டும்தான். நாகரீகத்திற்கு ஏற்ற வாறு நம்மை நாம் மாற்றிக் கொள்வது தான் இந்த மாதிரியான நோய்கள் இளம் வயதிலேயே அனைவருக்கும் வந்துவிடுகின்றன.

இந்த மூட்டு வலியை ஒரே மாதத்தில் சரி செய்யக் கூடிய அற்புதமான காய் என்றால் அது வெண்டைக்காய். வெண்டைக்காய் ஒன்று போதும் ஒரே மாதத்தில் உங்களுடைய மூட்டு வலி மறைந்து போகும். வெண்டைக்காயில் உள்ள வழவழப்புத் தன்மை மூட்டு வலிகளை சரிசெய்யும் தன்மை கொண்டது.

தேவையான பொருட்கள்:

1. வெண்டைக்காய் 10.

2. சின்ன வெங்காயம் 3.

3. சீரகம் அரை டீஸ்பூன்.

4. மஞ்சள்.

செய்முறை:

1. முதலில் 10 வெண்டைக்காயை எடுத்து நான்கு துண்டுகளாக அறுத்து எடுத்துக் கொள்ளவும்.

2. அதை ஒரு பாத்திரத்தில் போட்டு 3 தம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

3. அதில் மூன்று சின்ன வெங்காயத்தை போடவும்.

4. இதில் அரை டீஸ்பூன் அளவிற்கு சீரகத்தை சேர்க்கவும். சிறிதளவு மஞ்சள் தூளை சேர்க்கவும்.

5. நன்கு கொதிக்க வைக்கவும்.

6. 3 டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளர் ஆகும் வரை நன்கு கொதிக்க வைக்கவும்.

7. ஒரு டம்ளர் வந்தவுடன் இதை கொஞ்சம் கொஞ்சமாக சூடாக குடிக்க வேண்டும்.

ஒரு மாதம் இதனை செய்துவர மூட்டு வலி பறந்து போய் விடும். வெண்டைக்காயில் உள்ள வழவழப்புத் தன்மை மூட்டுவலியை சரி செய்யும் தன்மை உடையதால் இதனை பயன்படுத்தி பயன்பெறுங்கள். எல்லோரும் சாப்பிடலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் சாப்பிடலாம். உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டாம்.

-ஸ்டார் வெங்கட்.

Comments