சிங்கம்புணரியில் உள்ள வாரசந்தை மாற்றுவதற்காக இடம் தேர்வு..!

-MMH

சிங்கம்புணரியில் உள்ள வாரசந்தையை தற்காலிகமாக மாற்றுவதற்காக இடம் தேர்வு செய்ய பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் நேரில் ஆய்வு.சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் பஸ் நிலையம் அருகில் உள்ள வாரச்சந்தையை புதுப்பிப்பதற்காக,

 ரூ.2 கோடியே 65 லட்சத்தில் 300 கடைகள் அமைய உள்ள வாரச்சந்தை மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளன. எனவே, வாரச்சந்தையை தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றுவதற்காக புதிய இடம் தேர்வு செய்ய ஆய்வு நடந்தது. 

சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாடசாமி சுந்தரராஜன் தலைமையில் இந்த ஆய்வுப் பணி நடந்தது. சிங்கம்புணரி பேரூராட்சி செயல் அலுவலர் ஜான்முகமது உடன் இருந்தார். 

ஆய்வின் போது மழைக்காலங்களில் பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டும், நகரில் உள்ள கால்வாய்களில் கழிவுநீர் தேங்காமல் செல்லவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதில் துப்புரவு மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், அலுவலக எழுத்தர் அழகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

-பாரூக் சிவகங்கை.

Comments