வாக்காளர் அட்டை புது குழப்பம்!!!

     -MMH

திருப்பூர்:வாக்காளர் அட்டையில், தந்தை அல்லது கணவர் பெயரை, உறவினர் பெயர் என்று குறிப்பிடுவதால் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இளம் வாக்காளர்கள் கூறுகையில், 'வாக்காளர் அடையாள அட்டையில், தந்தை அல்லது தாய், கணவர் என்று குறிப்பிடுவது வழக்கம். தற்போது, உறவினர் பெயர் என்று தந்தை அல்லது கணவர் பெயரை குறிப்பிடுவதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதை அடையாள ஆவணமாக பயன்படுத்த முடியாது.

அடையாள அட்டையில், உறவினர் பெயர் என்று இருப்பதை மீண்டும், தந்தை அல்லது கணவர் பெயர் என்று குறிப்பிட வேண்டும்' என்றனர்.வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் கேட்டபோது, 'இளம் வாக்காளர்களிடம் இருந்து இதுபோன்ற கோரிக்கை கிடைத்துள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலர் மூலமாக, தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை செய்யப்படும்' என்றனர்.

நாளையவரலாறு செய்திக்காக,

-ஹ.மு. முஹம்மது ஹனீப, திருப்பூர்.

Comments