கட்டுக்கட்டாக பணம்! வாளையாறு அருகே பரபரப்பு..!

-MMH

பாலக்காடு மதுவிலக்கு போலீசார் நேற்று மாலை வாளையாறு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது    வாகனத்தில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் வாகனத்தை சோதனை செய்தனர் 

அப்பொழுது  இருக்கைக்கு அடியில் கட்டுக்கட்டாக 78 லட்சம்  ரூபாய் நோட்டுகள்  இருந்தன இதனைக் கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர் மேலும் அந்த வாலிபரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர் விசாரணையில் அவர் கொழிஞ்சாம்பாறை பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்பதும் கோவையிலிருந்து வாளையார் வழியாக கேரளாவுக்கு  கொண்டு செல்ல இருந்ததும் தெரியவந்தது இது ஹவாலா பணம் என்பது குறிப்பிடத்தக்கது பணத்தை பறிமுதல் செய்த போலீசார் மனோஜ்யை கைது செய்து விசாரிச்சது வருகிறார்கள். 

நாளைய வரலாறு செய்திக்காக,

-M.சுரேஷ்குமார் கோவை தெற்கு.   


Comments