கொட்டாம்பட்டி அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு!

 

-MMH 

சிங்கம்புணரியைச் சேர்ந்த முத்தழகு மகன் மணிகண்டபிரபு (19).அவரது நண்பர்கள் நிதிஷ்குமார், செல்வ விக்னேஷ், தருண் மற்றும் முத்தையா முரளிதரன். இவர்கள் அனைவரும் ஓட்டுநர் அருணாச்சலத்துடன் நான்கு சக்கர வாகனத்தில் துவரங்குறிச்சி நோக்கி சென்றிருக்கின்றனர்.கொட்டாம்பட்டியை அடுத்துச் சென்று கொண்டிருக்கும்போது அவர்களது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.அதில் மணிகண்ட பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காரில் பயணம் செய்த ஓட்டுனர் உட்பட ஐந்து பேரும் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து நடந்த குமுட்ராம்பட்டி விலக்கு பிரிவிலும், நான்கு வழிச்சாலையிலிருந்து கொட்டாம்பட்டி செல்லும் இரு வழிகளிலும் உயர்கோபுர மின் விளக்கு இல்லாததால் நிறைய விபத்துக்கள் அதே இடத்தில் தொடர்ந்து நடப்பதாகவும், இனிமேலும் விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க உயர் கோபுர மின் விளக்கு அமைக்குமாறும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

-பாரூக் சிவகங்கை.

Comments