மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவன்.. தலைமறைவு!!

  -MMH

     சென்னையில் பயங்கரம்.. மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவன்.. தலைமறைவு!

சென்னை பூந்தமல்லி அருகே குடும்ப தகராறில் மனைவியின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துவிட்டு தலைமறைவான கணவனுக்கு போலீஸ் வலை வீசி தேடி வருகிறார்கள்.

சென்னை பூந்தமல்லி, ரைட்டர் தெருவை சேர்ந்தவர் நூர்தீன்(52), பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி அசினா பேகம்(42), இவர்களுக்கு அல்டாப் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி கணவருடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.

வீட்டில் மூன்று பேர் மட்டும் உள்ளனர். இன்று காலை வழக்கம் போல் அல்டாப் வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் தனது தாய்க்கு செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் செல்போனை எடுக்காததால் சந்தேகமடைந்த வீட்டிற்கு வந்து பார்த்தபோது அசினா பேகம் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அக்கம், பக்கத்தினரின் உதவியுடன் அசினா பேகத்தை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த போலீசார் இறந்து போன அசினா பேகம் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவரது கழுத்து இறுக்கப்பட்டும் முகத்தில் காயங்களின் தழும்புகளும் இருந்தது. மேலும் அவர் கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் அவரது கணவர் வீட்டில் இல்லை செல்போனை வைத்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் இதன் காரணமாக மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தலைமறைவாகி இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

எதற்காக கொலை செய்தார் என்பது நூரூதீன் கைது செய்யப்பட்ட பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து தலைமறைவாக உள்ள நூரூதீனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-பாலாஜி, போரூர்.

Comments