பொள்ளாச்சி சாலையில் நாய் குட்டியை காப்பாற்றிய லாரி ஓட்டுநர்..!!

  -MMH

     பொள்ளாச்சியை அடுத்த புலியன்கண்டி என்ற இடத்தில் கோவையில் இருந்து வால்பாறைக்கு எண்ணெய் ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரேன சாலையை கடக்க முயன்ற நாய் எதிர்பாராத விதமாக  லாரியின்  குறுக்கே  வந்தது. அந்த நாய்க்கு அடி படாமல் இருக்க ஓட்டுநர் தன்  வண்டியை சாலை ஓர பள்ளத்தில் இறக்கினார். இதனால் வண்டியின் முன் சக்கரம் பள்ளத்தில் உள்ள சேற்றில் சிக்கியது.பின்னர் ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் வண்டி மீர்க்கப்பட்டது. இச்சம்பவதின் போது அதிஷ்டவசமாக நாய் உட்பட யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.

ஒரு நாயை காப்பதற்காக தனது வண்டியை பள்ளத்தில் இறக்கிய அந்த மனித நேய மனிதரை பொள்ளாச்சி மக்கள் அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V.ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.

Comments