இன்சுலின் பம்ப் உபகரணத்தை இலவசமாக வழங்கியுள்ள தனியார் அறக்கட்டளை!!

  -MMH

     கோவை: சிறுவயதிலேயே நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடலிலேயே இருந்து கொண்டு இன்சுலின் செலுத்தும் "இன்சுலின் பம்ப்" உபகரணத்தை தனியார் அறக்கட்டளை ஒன்று இலவசமாக வழங்கியுள்ளது.

'டைப் ஒன்று' என்ற நீரழிவு நோய்  காரணமாக குழந்தைகளுக்கு சிறுநீரகம் பாதிப்பு செயலிழப்பு போன்றவை ஏற்பட  வாய்ப்புள்ளது என்பதை கருதி  'இதயங்கள்' பொதுநல அமைப்பின் சார்பில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான இன்சுலின் பம்ப் வழங்கும் நிகழ்ச்சி கோவை காளப்பட்டியில் உள்ள தனியார் வளாகத்தில் நடைபெற்றது. சிறுதுளி, இதயங்கள் அறக்கட்டளை உள்ளிட்ட 4 அமைப்புகள் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் நீரழிவால் பாதிக்கப்பட்ட 10 குழந்தைகளுக்கு இன்சுலின் பம்ப் உபகரணம் இலவசமாக வழங்கப்பட்டது. இவ்வுபகரணங்களை சிறுதுளி அமைப்பின் நிறுவன தலைவர் வனிதா மோகன் கலந்துகொண்டு வழங்கினார். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இதயங்கள் பொதுநல அமைப்பின் தலைவரும் மருத்துவருமான கிருஷ்ணன்சாமிநாதன், இந்நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை வருடத்திற்கு 5 சதவிகிதம் அதிகரித்து வரும் நிலையில் இக்குழந்தைகளின் வாழ்க்கை நலனை கருத்தில் கொண்டே இந்த உபகரணம் இலவசமாக வழங்கபட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த இன்சுலின் பம்பினை அரசு முன்வந்து பாதிப்புள்ளவர்களுக்கு முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்  கோரிக்கை விடுத்தார். நிகழ்ச்சியின் இறுதியில் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கொண்டு மரம் நடும் நிகழ்வு நடத்தப்பட்டது. இந்நிகழ்வு  காண்போரை நெகிழ்ச்சியடைய செய்தது.

-சீனி,போத்தனூர்.

Comments