நெடுஞ்சாலை பள்ளத்தை சீர் செய்த போக்குவரத்து காவலர்....!

 

-MMH

கம்பத்தில் நெடுஞ்சாலை பள்ளத்தை சீர் செய்த போக்குவரத்து காவலர் தாமரை மாணிக்கத்துக்கு : பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

தேனி மாவட்டம் கம்பம் கேரளாவின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால் கம்பம் வழியாக கேரளா மாநிலத்திற்கு நாள்தோறும் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று  வருகின்றன.

மேலும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக கம்பம் நகர் பகுதிக்கு வந்து செல்கின்றனர். இதனால் கம்பம் மெயின் ரோடு பரபரப்பாகவே காணப்படும்.

இந்நிலையில், கம்பம்மெட்டு சாலை பிரிவு, தலைமை தபால் அலுவலகம் அருகே பிரதான சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டிருந்தது. இந்த பள்ளத்தால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல், இருசக்கர வாகன விபத்துக்கள்  ஏற்பட்டு வந்தது.

இது குறித்து பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.

இதற்கிடையில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருவதால் சாலைகளில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

இந்நிலையில், வியாழக்கிழமை சாலையில் உள்ள பள்ளத்தில் கனரக வாகனம் ஒன்று சிக்கி கொண்டது. இதனால் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

அப்போது கம்பம்மெட்டு சாலை பிரிவில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ் ஏட்டு தாமரை மாணிக்கம் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ததார்

வாகனங்கள் தடையின்றி செல்லும் விதமாக சாலையில் இருந்த பள்ளங்களை காவலர் சீருடையிலேயே தான் ஒருவர் மட்டுமே நின்று கற்கள் மற்றும் மணல் கொட்டி சீரமைத்தார்.

இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் எந்த சிரமமும் இல்லாமல் சென்று வருகின்றனர். இதற்கிடையே போலீஸ் ஏட்டு சாலையை சீரமைத்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து, காவலர்களும் சமுக சேவையில் அக்கறை கொண்டவர்கள் என்பதை தாமரை மாணிக்கத்தின் சே வையை காட்டுகிறது.என்று சமுக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர். 

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆசிக் தேனி.

Comments