கம்பத்தில் மாநில அளவிலான இரட்டையர் இறகு பந்தாட்ட போட்டி!!

     -MMH

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் மாநில அளவிலான இரட்டையர் இறகு பந்தாட்ட போட்டி நடைபெறுகிறது.

தேனி மாவட்டம் கம்பத்தில் மாநில அளவிலான இரட்டையர் பங்கேற்கும் இறகு பந்தாட்ட போட்டி டிச.13 ஆம் தேதி ஏல விவசாயிகள் ஐக்கிய மேல்நிலைப்பள்ளி அருகே  உள்ள வின்னர் பேட்மின்டன் அகாதெமியில்  நடைபெறுகிறது.

இந்த போட்டியில் பங்கேற்பவர்கள் இதுவரை போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறாதவர்கள் மட்டும் பங்கேற்கலாம்.  35 வயது குறைந்தவர், கூடிய இரட்டையர் என இரண்டு வகையாக ஆட்ட நடைபெறுகிறது.  மாவிஸ் 350 பந்துகள் பயன்படுத்தப்படுகிறது, சிந்தடிக் மைதானம் என்பதால் குறிப்பிட்ட ஷீக்கள் அணியவேண்டும்.

ஆண்கள் இரட்டையர்  பிரிவுக்கு முதல் பரிசு ரூபாய் 6 ஆயிரம், 4 ஆயிரம், 2 ஆயிரம் எனவும், இரண்டாவது 35 வயது பிரிவினருக்கு முதல்பரிசு ரூபாய் 5 ஆயிரம், 3 ஆயிரம், 2 ஆயிரம் என வழங்கப்படுகிறது. போட்டிகளில் பங்கேற்க வின்னர் அலீம் 98425 91695 என்ற செல்லிடப்பேசியில் தொடர்பு கொள்ளலாம். 

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆசிக்,தேனி.

Comments