சிங்கம்புணரியில் மறியல் செய்த திமுகவினர் கைது!

 

-MMH 

திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சிங்கம்புணரி ஒன்றிய, நகர திமுக சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியல் போராட்டத்தின்போது உதயநிதி அவர்களின் பிரச்சாரத்தைத் தடுக்கும் நோக்கில், தொடர்ச்சியாக அவரை கைது செய்வதை கண்டித்து ஆவேசமான கோஷங்கள் எழுப்பப்பட்டன.


மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, திமுக ஒன்றியச் செயலாளர் ம.பூமிநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ந.அம்பலமுத்து மற்றும் மு.சோமசுந்தரம், ஒன்றிய துணைச்செயலாளர் சிவபுரி.சேகர், நகரப் பொருளாளர் கதிர்வேல், குடோன் எஸ்.சுப்பிரமணி, கதிர்காமம், ந.மதிசூடியன், வழக்கறிஞரணி துரைவேலவன் மற்றும் ரவி, மணப்பட்டி பாஸ்கரன், குமரிபட்டி கணபதி,  செந்தில்கிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி மனோகரன்,

தொழில் நுட்ப அணி சையது இப்ராஹிம், சிராஜுதீன், மாணவரணி யா.அலாவுதீன், அசாருதீன், நவீன் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

-பாரூக் சிவகங்கை.

Comments