பொள்ளாச்சி மீன்கரை சாலை முக்கரை விநாயகர் கோவில் அகற்றம்..!!

 

-MMH

பொள்ளாச்சியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.சாலையின் அருகில் உள்ள கட்டிடங்கள் மற்றும் மரங்கள் அகற்ற பட்டு வருகிறது.மீன்கரை சாலை உள்ள150 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த  முக்கரை விநாயகர் கோவிலும் அகற்ற பட்டு வருகிறது.

காவல்துறை பாதுகாப்புடன் சிலைகள் அகற்றப்பட்டு பாதுகாப்புடன் நிர்வாகத்தினர் எடுத்து வைத்து வருகின்றனர்.நீண்ட பழைமையான கோவில் இடிப்பது மிகவும் வருத்தமாக உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V.ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments