செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பில் உள்ளது- வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி தெரிவிப்பு !!

  

  -MMH

 செம்பரம்பாக்கம் ஏரி  பாதுகாப்பில்  உள்ளது பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை - வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்.

     சென்னை பெருநகரின் முக்கிய நீராதாரமான செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. ஏரியில் 82 விழுக்காடு அளவிற்கு நீர் நிரம்பியுள்ள சூழலில் உபரிநீர் திறக்கும் திட்டம் எதுவும் இல்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னைக்குக் குடிநீர் வழங்கும் நான்கு ஏரிகளில் செம்பரம்பாக்கம் ஏரி மிகப்பெரியதாகும். இந்த ஏரியின் உச்ச நீர்மட்டம் 24 அடி என்கிற நிலையில் மாலை நிலவரப்படி 21.20 அடியாக உள்ளது. ஏரியின் மொத்தக் கொள்ளளவு 3685 மில்லியன் கன அடியாகும். 

   தற்போது, மாலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியில் 2908 மில்லியன் கனஅடி நீர் இருப்புள்ளது. இது ஏரியின் மொத்தக் கொள்ளளவில் 82 விழுக்காடாகும் . செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிப்பதையடுத்து, பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அப்போது செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பாக உள்ளது, மக்கள் யாரும் ஏரி நிலவரம் பற்றி அச்சம் கொள்ள தேவையில்லை என வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்.

-பாலாஜி தங்கமாரியப்பன், சென்னை போரூர்.

Comments