பச்சோந்தி! கிணற்று ஆமை! மண்புழு! புது விளக்கம் தந்த பொள்ளாச்சி ஜெயராமன்!!!

-MMH

திருப்பூர்;''தொண்டர்கள் பச்சோந்தியாகவோ, கிணற்று ஆமை போலவோ இருக்க வேண்டாம். மண் புழுவாக இருந்து, கட்சிக்கு உரமேற்றுங்கள்,'' என, திருப்பூரில் நேற்று பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளராக, நேற்று அவர் பொறுப்பேற்று கொண்ட பின், கூட்டத்தில் பேசியதாவது:கட்சியில், மூன்று வகையான ஆட்கள் உள்ளனர். நிர்வாகிகளுக்கு தகுந்தபடி மாறி உள்ளடி வேலை செய்யும் பச்சோந்திகள், ஆளுங்கட்சியாக இருக்கும்போது மட்டும் பதவி சுகம் அனுபவித்து, எதிர்க்கட்சியானதும் மாயமாக மறைந்துவிடும் கிணற்று ஆமைகள்.

 கண்ணுக்கு தெரியாமல் மண்ணுக்கு அடியில் இருக்கும் மண்புழுக்கள் என, மூன்று வகையான நபர்கள் உள்ளனர். இவர்களில், மண்ணை வளமாக்கும், மண்புழுக்களை போல், கட்சிக்காக உழைக்கும் தொண்டர்களே முக்கியமானவர்கள்.எக்காரணத்தை கொண்டும், தொண்டர்கள், தனி நபரிடம் விசுவாசம் காட்ட வேண்டாம். முதல்வர், துணை முதல்வரிடம் விசுவாசமாக இருந்தாலே போதும். மண்புழுக்களாக இருந்தாலும், அ.தி.மு.க.,வினர் வீரியம் மிக்கவர்கள். அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும், மண் புழுக்களை போல் செயல்பட்டு, கட்சியை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

நாளையவரலாறு செய்திக்காக, 

-முஹம்மதுஹனீப் திருப்பூர்.

Comments