ஆண்டிபட்டி அருகே சரளைமண் திருட்டு!! டிராக்டர் பொக்லைன் பறிமுதல்..!

 

-MMH

ஆண்டிபட்டி அருகே அனுமதிக்கப்படாத இடங்களில் சரளைமண் திருட பயன்படுத்தப்பட்ட டிராக்டா் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். ஆண்டிபட்டி அருகே உள்ள ஜக்கம்மாள்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் சரளை மண் எடுக்க கனிம வளத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த மண் குவாரியில் அனுமதிக்கப்பட்ட இடத்தைவிட்டு வேறொரு இடத்தில் மண் அள்ளுவதாக புகாா் எழுந்தது. 

இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸாா் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினா். அப்போது கனிமவளத்துறை அனுமதித்த இடத்தினை விட்டுவிட்டு அனுமதிக்கப்படாத மாற்று இடத்தில் மண் அள்ளிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சரளை மண் அள்ளப் பயன்படுத்தப்பட்ட பொக்லைன், புல்டோசா் மற்றும் ஒரு டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸாா், ராஜதானி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீஸாா் இதில் தொடா்புடையவா்களை தேடி வருகின்றனா்.

நாளைய வரலாறு  செய்திக்காக,

-ஆசிக் தேனி.

Comments