போக்சோ சட்டத்தில் கைதாகி ஜாமினில் வந்தவர்!! - விஷமருந்தி தற்கொலை!!

     -MMH

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மாதவராயன்பட்டியைச் சேர்ந்தவர் வடிவேல். வயது 35.இவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தை உண்டு.

கடந்த மாதம் இவர் ஒரு சிறுமியை பலாத்காரம் செய்ததாக புகாரளிக்கப்பட்டதன் பேரில், இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் திருப்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

தற்போது, வடிவேல் நிபந்தனை ஜாமினில் வந்துள்ள நிலையில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கையொப்பமிட்டுத் திரும்பும் வழியில் ஒதுக்குப்புறமாக ஒரு கண்மாய்க் கரையில் அமர்ந்து, விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தை மதுவில் கலந்து அருந்தியுள்ளார். 

சிறிது நேரத்தில் வடிவேல் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். 

பிரேதத்தைக் கைப்பற்றிய எஸ்.வி.மங்கலம் காவல்துறையினர், சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் உடற்கூறு  ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வை எஸ்.வி.மங்கலம் காவல் ஆய்வாளர் அழகர் விசாரணை செய்து வருகிறார்.

-பாரூக்,சிவகங்கை.

Comments