சிவகங்கையில் “அயன்” திரைப்பட பாணியில் சாக்கடையில் தேடிய லஞ்ச ஒழிப்புப் போலீசார்!!

 

 -MMH

     சிவகங்கை: நவ - 24.

     சிவகங்கையில் சுகாதார நலப்பணிகள் துறையின் இணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீரெனப் புகுந்து தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அலுவலகத்தில் இருந்த சிலர் கணக்கில் வராத ரூ.10,000 -ஐ ஜன்னல் வழியே வெளியே வீசியதாகத் தெரிகிறது. இதை தொடர்ந்து அலுவலகம் மூடபட்டு JD இளங்கோ மகேஸ்வரன் கண்காணிப்பாளர்,பெரியநாயகம் உள்ளிட்ட 10 பணியாளர்களிடம் 7 மணி நேரமாக விசாரித்தனர். ஜன்னல் அருகே உள்ள சாக்கடையில் பணமோ, தங்க நாணயமோ வீசியிருக்கலாம் என சாக்கடையில் இறங்கி லஞ்ச ஒழிப்பு போலீசார் தேடினார்கள் .அப்போது ஒன்றும் கிடைக்காத நிலையில் ரூ. 10,000 மட்டும் பறிமுதல் செய்ததாக கூறுகின்றனர்.

ஏற்கனவே இந்த அலுவலகத்தில் மருத்துவர்களின் இடமாறுதலுக்கு ரூ. 30,000 மற்றும் தங்க நாணயம் ,மாற்று பணிக்கு பணம் அது மட்டுமில்லாமல் கொரோனா காலத்தில் தனியார் மருத்துவமனைகளை வரன்முறைபடுத்தி உரிமம் வழங்க லஞ்சம் போன்றவை வாங்கப்படுவதாக புகார்கள் எழுந்தது.

இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ.10,000 மட்டும் பறிமுதல் செய்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

-ஃபாரூக்,சிவகங்கை.

Comments