ரயில்வே கூட்ஸ் ஷெட்டில் மழை நீர் தேக்கத்தால் அவதி!!

 

  -MMH

ரயில்வே கூட்ஸ் ஷெட்டில்மழை நீர் தேக்கத்தால் அவதி!!

     திருப்பூர்:திருப்பூர் ரயில்வே கூட்ஸ் ெஷட் பகுதியில் மழை நீர் தேங்கி நின்று அவதியை ஏற்படுத்துகிறது.திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், 'கூட்ஸ் ெஷட்' உள்ளது. பல்வேறு வெளி மாநிலங்களிலிருந்து சரக்கு ரயில்களில் வரும் பொருட்கள் இங்கு கொண்டு வந்து இறக்கப்படுகிறது. பெரும்பாலும் ரயில் வேகன்களிலிருந்து இவை நேரடியாக லாரிகளில் ஏற்றியும் அனுப்பப்படுகிறது.

இதற்காக பெரிய அளவிலான இடம் பயன்படுத்தப்படுகிறது.திறந்த வெளி பகுதியாக இருப்பதால், மழை நீர் தேங்கி நின்று அவதி ஏற்படுகிறது. இதனால், சரக்கு ஏற்ற வரும் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. சுமை துாக்கும் தொழிலாளர்களும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.இதனை தவிர்க்கும் வகையில், இப்பகுதியில் சிமென்ட் தளம் அமைக்க திட்டமிட்டு பணி துவங்கியது. ஆனால், முழுமையாக முடிக்கப்படாமல் மண் கொட்டி சமன் செய்த நிலையிலேயே உள்ளது.சமீபத்தில், தொடர் மழையால்,பல இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இவற்றில் கொசுக்களும் உற்பத்தியாகி கூடுதல் அவதியை அதிகப்படுத்துகிறது.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-முஹம்மது ஹனீப், திருப்பூர்.

Comments