தொழிலதிபர் சேகர் ரெட்டியின் நண்பரின் தந்தை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்!!.

 

    -MMH

    பணருட்டி : தொழிலதிபர் சேகர் ரெட்டியின் நண்பர் முத்துக்குமார். பண்ருட்டி அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள இவரது தந்தை சுகி சந்திரன் வீட்டில் வருமான வரித் துறையினர் நேற்றிரவு முதல் தீவிர சோதனை செய்து வருகின்றனர். இரண்டு ஆண்டுகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி குவித்த புகாரில் ஐடி ரெய்டு நடந்து வருகிறது.

முன்னதாக 2016ல் பணமதிப்பிழப்பின் போது தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் கட்டுகட்காக ரூ.2000 நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இதில் பழைய நோட்டுகளை, வங்கி அதிகாரிகளின் உதவியுடன் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றியதாகப் புகார் எழுந்தது. இதனால் அரசுக்கு 247.13 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் சேகர் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கானது சென்னை 11வது சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் உரிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி ஆறு பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது குறிப்பிடத்த்ககது.

-சுரேந்தர்.

Comments