மாதப்பூரில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் !!!

 -MMH

    மாதப்பூரில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் கிராமத்தில் கடந்த 20 நாள்களாக குடிநீர் வராததால் அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட ஏ எஸ்பி ஸ்ரேயா பல்லடம் காவல் ஆய்வாளர் சுஜாதா மற்றும் காவல்துறையினர் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

நாளையவரலாறு செய்திக்காக,

-முஹம்மது ஹனீப், திருப்பூர்.

Comments