கோவை மாநகராச்சியின் அலட்சியம்!! நோய் பரவும் அபாயம்...!

-MMH 

பொறுப்பில்லாத மாநகராட்சி புலம்பி தள்ளும் பொது மக்கள்:

கோவைமாவட்டத்தை சுற்றியுள்ள 100 வார்டு குப்பைகளை கோவை மாநகராட்சி நிர்வாகம் அள்ளிக்கொண்டு கோவையிலிருந்து போத்தனூர் வெள்ளூர் பகுதியில் இருக்கக்கூடிய குப்பை கிடங்கில் தினந்தோறும் ஆயிரம் டன் வீதம் கொட்டிக்கொண்டு  வருகிறது.

இந்நிலையில் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் கொசு ஈக்கள் போன்ற தொந்தரவினால் அந்தப் பகுதி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள்.

இது ஒருபுறமிருக்க குப்பைகளை ஏற்றிவரும் வாகனங்கள்  குப்பைக்கு மேல் மூடக்கூடிய வலைகளை சரிவர மூடுவது இல்லை என்று புகார்கள் கூறுகின்றனர். தினந்தோறும் போத்தனூர் பகுதியில் இதுபோன்ற லாரிகளில் இருந்து ஆங்காங்கே குப்பைகள் கீழே விழுவதை பொதுமக்கள் கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இதை சரி செய்யும் வகையில் மாநகராட்சி ஊழியர்கள் தங்களுக்கு கொடுக்கும் பணியினை சரிவர செய்யாததால் ரோடுகள் குப்பை தேங்கும் அபாயமும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும் இருப்பதாக கூறுகின்றனர்.

இதுபோன்று நடைபெறாமல் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து சரி செய்ய வேண்டும் என்று அங்குள்ள பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொள்கிறார்கள்.              

-ஈஷா கோவை.

Comments