போக்குவரத்தை அச்சுறுத்தும் கால்நடைகள்..!!

  -MMH

     கோவை மாவட்டம் பொள்ளாச்சி போக்குவரத்து சாலைகளில் காணப்படும் கால்நடைகள். விவசாய நிலங்களில் வளர்க்கப்படும் கால்நடைகள் மேச்சலுக்கு விவசாய நிலத்தில் மேய்க்க படுகிறது. ஆனால் ஒரு சில மானிடர்கள் போக்குவரத்து சாலையில் அருகில் விளைந்த புள்களை மேய்வதற்கு சாலையில் கட்டி செல்கின்றனர்.

பொள்ளாச்சி கிழக்கு பெரியாகவுண்டணூர் பகுதியில் சாலையின் ஓரத்தில் ஐந்திற்கு மேற்பட்ட காளை மாட்டை மேச்சலுக்கு கட்டி வைத்து சென்று விட்டுள்ளனர். காலையில் இருந்து மாலை வரை சாலையின் அருகில் கட்டி வைக்க பட்டுள்ள இந்த காளை மாடு சாலையில் செல்வோரை அச்சுறுத்தும் வகையிலும் போக்குவரத்து இடையூறு செய்யும் வகையிலும் சாலையில் தென்படுகிறது.

பொள்ளாச்சியில் இருந்து தாராபுரம் கரூர் செல்லும் பிரதான  நெடுஞ்சாலை இது என்பது குறிப்பிடத்தக்கது. அச்சுறுத்தும் வகையில் கால்நடைகள் கட்டி வைக்கப்பட்டுள்ளதை ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா..??

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன்,

பொள்ளாச்சி கிழக்கு.

Comments