விபத்தை தடுக்க ஹெல்மெட் அணியுங்கள் சமூக ஆர்வலர்களின் கருத்து.!!

  -MMH
     
     கோவை மாவட்டம் நீலாம்பூர் பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில்அதிவேகமாக வந்த ஒருவர் ஹெல்மெட் அணியாததால் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இருக்கிறார்.

கேரளாவிலிருந்து நேற்றைய முன்தினம் காலை 9 மணி அளவில் கோவை நோக்கி வந்த அந்த இளைஞர் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்துள்ளார். எதிரே வந்த ஓம்னி என்ற நான்கு சக்கர வாகனத்தின் மீது மோதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்‌.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இளைஞரின்  ப்ரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது போன்ற எதிர்பாராத விபத்துகளை தடுக்கும் வகையில் அரசாங்கம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. அதை கவனத்தில் கொண்டால் மட்டுமே இதுபோன்ற விபத்துக்களை தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

-ஈஷா,ராஜேஷ் கோவை.

Comments