தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை! - மீறினால் அபராதம், சிறை..!

 

-MMH

கடுமையான அபராதம், சிறை.. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை.. அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்பதல்!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராக கடுமையாக எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருகிறது. இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பலர் பணத்தை இழப்பதும், இதனால் சிலர் தற்கொலைக்கு தள்ளப்பட்ட சம்பவங்களும் தமிழகத்தில் நடந்து வருகிறது.

சென்னை ஹைகோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் ஆன்லைன் ரம்மியைத் தடை செய்வது தொடர்பாக பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.

இதையடுத்து தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. தமிழக அரசின் இந்த அதிரடி முடிவு பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

இதன் காரணமாக இனி ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும். 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். விளையாடும் நபர்களின் போன், லேப்டாப் பறிமுதல் செய்யப்படும்.

அரங்கம் இன்றி தனியாக விளையாடும் நபர்களுக்கு ரூ.5000 அபராதமும், 6 மாதம் சிறையும் விதிக்கப்படும், என்று இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-V.ருக்மாங்கதன் சென்னை.        

Comments