நாடோடிகளாக உள்ள சர்க்கஸ் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி...!

-MMH 

நாடோடிகளாக உள்ள சர்க்கஸ் தொழிலாளர்களின் 8 குழந்தைகள் திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் சிங்கம்புணரியில் பள்ளியில் சேர்ப்பு. உதவி 

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வள்ளலார் மடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள சர்க்கஸ் தொழில் சார்ந்த மக்களின் குறைகளை நேற்று மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி

ஆய்வு செய்து நேரில் கேட்டறிந்தார்.

அதன் பின்பு அவரின் உத்தரவைத் தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலர் பா.சங்குமுத்தையா தலைமையில் சிங்கம்புணரியில் உள்ள அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்கள், கல்வித் திட்ட அலுவலர்கள், வருவாய்த் துறையினர் அனைவரும் கலந்து கொண்டு களஆய்வு செய்தனர்.

ஆய்வின் முடிவில் கல்வி கற்கும் நிலையில் உள்ள சுமார் 8 குழந்தைகள் கண்டறியப்பட்டு,

அவர்கள் இன்றே பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். மேலும் அவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகம், சீருடை, புத்தகப் பை அனைத்தும் உடனடியாக வழங்கப்பட்டன.

அவர்களில் 18 வயதிற்கு மேற்பட்ட நிலையில் உள்ள சுமார் 20 நபர்களுக்கு எழுதப் படிக்க கற்பிக்கும் பொருட்டு, “கற்போம் எழுதுவோம்” திட்டம் மூலம் அனைவருக்கும் கல்வித் திட்ட அலுவலகம் மூலம் அவர்கள் பகுதியிலேயே கல்வி கற்பிக்க, தன்னார்வலர்கள் மூலம் கல்வி கற்பிக்க ஆவன செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் உடனடி முயற்சி அப்பகுதியில் மக்களின் பாராட்டினைப் பெற்றுள்ளது.

-  பாரூக் சிவகங்கை.

Comments