பொள்ளாச்சி சந்தையில் பிடிபட்ட ஆடு திருடர்கள்..!!

  -MMH

பொள்ளாச்சியை அடுத்த வே. காளியாபுரத்தை சேர்த்தவர் பாலு. விவசாயியானா இவரது தோட்டத்தில் கட்டி வைக்க பட்டு இருந்த ஆடு ஓன்று நேற்று முன்தினம் திருடு போனது. சந்தேகம் அடைந்து ,பின்னர் அதற்கு அடுத்த நாள் பாலு பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு சென்று உள்ளார். அப்போது அங்கே தனது தோட்டத்து சாலையில் திருடு போன ஆட்டை இருவர் விற்பனை செய்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை தொடர்ந்து பாலு பொது மக்கள் உதவியுடன் இருவரையும் பிடிக்க முயற்சித்து அதில் பொள்ளச்சி வேட்டைகாரன் புதுரை சேர்ந்த கார்த்திக் என்பவரை பிடித்து ஆனைமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் ஆடு திருடிய இருவரில் மற்றொருவர் பிடிபட்ட கார்த்திக் என்பவரின் தம்பி கௌதம் என்பது தெரியவந்தது . இதனை தொடர்ந்து தப்பி ஓடிய கௌதமை போலீசார் தேடி வருவதோடு போலீசார் ஆட்டை பாலுவிடம் ஒப்படைத்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V.ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.

Comments